க்ரீன் டீ குடித்தால் உண்மையில் உடல் எடை குறையுமா?
இன்றைய காலத்தில் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசையாக உள்ளது.
அதற்காக அவர்கள் நிறைய முயற்சிகளை செய்து வருகின்றன.
குறிப்பாக எடை இழப்பு என்று வரும் போது க்ரீன் டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
உடல் எடையை குறைக்கும் அளவிற்கு கிரீன் டீ உண்மையில் உதவுகின்றதா என்பதை பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க உதவுகின்றதா?
கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.
உடற்பயிற்சிக்குப் பிறகு ஒரு நல்ல பானமாகவும் கருதப்படுகிறது, இது உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கும். ஃபிட்னெஸ் உணர்வுள்ளவர்கள் பொதுவாக அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவின் அளவு பற்றி விழிப்புடன் இருப்பார்கள், அதில் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் இது உடற்பயிற்சியால் உருவாகும் வீக்கம் மற்றும் தசை வலியை போக்கவும் உதவுகிறது.
பக்கவிளைவுகள் உண்டா?
க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்கிற ஆன்டி ஆக்சிடண்டுகள் காணப்படுகிறது, இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதேசமயம் தூங்கும் நேரத்தில் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கலாம், இதிலுள்ள காஃபின் தூக்கத்தை கெடுத்துவிடும்.
வெறும் வயிற்றில் க்ரீ டீ குடிப்பதால் இரைப்பை பிரச்சனைகள் ஏற்படும், ஏதேனும் மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு அதைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.