வெளிநாட்டில் மிக மோசமான சம்பவத்திற்கு பிறகு இந்தியாவிற்கு தப்பியோடிய நபர்
அமெரிக்காவில் மிக மோசமான சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய இந்தியர் 20 ஆண்டுகளுக்கு பின்னர் நாடுகடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கு
தற்போது 54 வயதாகும் கணேஷ் ஷெனாய் என்பவர் கடந்த 2005ல் ஏற்படுத்திய சாலை விபத்தில் சிக்கி Philip Mastropolo என்பவர் சம்பவயிடத்தில் மரணமடைந்தார்.
இச்சம்பவத்தை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஷெனாய் இந்தியாவிற்கு தப்பினார். ஆனால் பல ஆண்டுகள் சட்ட போராட்டங்களுக்குப் பின்னர் ஷெனாய் அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய Mastropolo சம்பவயிடத்திலேயே மரணமடைந்திருந்தார். தற்போது இந்த வழக்கில் ஷெனாய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று காலை 6 மணிக்குப் பிறகு ஓல்ட் கண்ட்ரி சாலை மற்றும் லெவிட்டவுன் பார்க்வே சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது SUNY Old Westbury-ல் மாணவரான 33 வயது ஷெனாய், வேக வரம்பிற்கும் இரு மடங்கு வேகத்தில் தமது 1993 வால்வோ வாகனத்தை செலுத்தியுள்ளார், அத்துடன் Mastropolo-வின் Cadillac மீது மோதியுள்ளார்.
இந்த நிலையில், அவரது நியூயார்க் சாரதி உரிமம் மற்றும் இந்திய கடவுச்சீட்டு இரண்டையும் பொலிசார் பறிமுதல் செய்த போதிலும், 14 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 25, 2005 அன்று ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து ஷெனாய் இந்தியாவிற்கு தப்பினார்.
நாடுகடத்தல் கோரிக்கை
ஆகஸ்ட் 8ம் திகதி ஷெனாய் மீது கைது வாரண்ட் மற்றும் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அடுத்த 18 ஆண்டுகளுக்கு, ஷெனாய் இந்திய நீதிமன்றங்களில் நாடுகடத்தலை எதிர்த்துப் போராடினார், மும்பையில் சுதந்திரமாக வாழ்ந்தார்.
ஷெனாயை நாடு கடத்துவதற்கு விரிவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்பட்டது, மேலும் 2017 க்குப் பிறகு இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஒருவர் நாடு கடத்தப்படுவது இதுவே முதல் முறை.
இந்தியா அரிதாகவே நாடுகடத்தல் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கிறது, மேலும் தூதரக அழுத்தம் இருந்தாலும் இந்த செயல்முறை பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |