ஜூலை 7 முதல்... சாரதியைக் கண்காணிக்கும் கார்கள் அறிமுகம்
ஜூலை மாதம் 7ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தில் வாங்கப்படும் கார்களில், காரின் சாரதியைக் கண்காணிக்கும் வகையில் கமெராக்கள் பொருத்தப்பட உள்ளன.
சாரதியைக் கண்காணிக்கும் கார்கள்
ஆம், சாரதியின் முகத்துக்கு நேராக பொருத்தப்பட்டுள்ள அந்த கமெரா, சாரதியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கிறது.
இந்த அமைப்பு, Advanced Driver Distraction Warning system (ADDW) அல்லது Driver Monitoring System (DMS) என அழைக்கப்படுகிறது.

காரை இயக்கும்போது, அதன் சாரதி கண்களை மூடித்திறப்பதையும் கொட்டாவி விடுவதையும் கமெரா கவனிக்கும் நிலையில், சாரதியின் கவனம் திசை திரும்பினாலோ அல்லது அவருக்கு தூக்கம் வருவதாகத் தோன்றினாலோ, எச்சரிக்கை கொடுக்கும் வகையில் இந்த அமைப்பு பொருத்தப்படுகிறது.
இந்த அமைப்பை சாரதிகள் செயலிழக்கச் செய்யமுடியும். ஆனால், இந்த கார்கள் தயாரிக்கப்படும்போதே, கார் ஒவ்வொரு முறை ஸ்டார்ட் செய்யப்படும்போதும் இந்த அமைப்பு மீண்டும் இயங்கத் துவங்கும் வகையில்தான் அவை தயாரிக்கப்படுகின்றன.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், பாதுகாப்பை மையமாகக் கொண்டு கமெராவுடன் உருவாக்கப்படும் இந்தக் கார்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதுப்பிக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு ஒழுங்குமுறையின்படி உருவாக்கப்படுகின்றன.
சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளதால், சுவிட்சர்லாந்தில் இனி மக்கள் வாங்கும் அனைத்துக் கார்களிலும் இந்த பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |