சொந்த வாகனங்களை பயன்படுத்துவதாக இல்லை... அரசாங்கத்தை அறிவித்த பிரித்தானியர்கள்: வெளிவரும் பின்னணி
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகள் தங்கள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து விலக்குவதாக வெளியான தகவலுக்கு, விலைவாசி உயர்வை காரணமாக கூறப்படுகிறது.
SORN விண்ணப்பம்
பிரித்தானியாவில் கடந்த 2022ல் மட்டும் சுமார் 2.7 மில்லியன் வாகனங்கள், இனி பயன்படுத்தப்படாது என அரசாங்கத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@shutterstock
SORN விண்ணப்பம் அளிக்கப்பட்ட வாகனங்களை எந்த அவசரத்திற்கும் சாரதிகள் பயன்படுத்த முடியாது. மட்டுமின்றி, தனிப்பட்ட பகுதியில் அந்த வாகனங்களை நிறுத்த வேண்டும்.
மேலும், இந்த வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் வரியும் செலுத்த தேவையில்லை. கடந்த அக்டோபரில் மட்டும் SORN விண்ணப்பம் அளிக்கப்பட்ட வாகனங்கலின் எண்ணிக்கை 77 சதவிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாதத்தில் தான் 41 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வு பிரித்தானியாவில் பதிவானது. குடும்ப செலவை சமாளிக்க தடுமாறும் பிரித்தானியர்கள், பணத்தை சேமிக்கும் பொருட்டு, தங்கள் வாகனங்களை இனி பயன்படுத்துவதில்லை என முடிவுக்கு வந்திருக்கலாம் என நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
SORN விண்ணப்பம் அளித்து பதிவு செய்தவர்கள், இனி சாலைகளில் தங்கள் வாகனங்களை செலுத்த முடியாது. 2020ல் கொரோனா பெருந்தொற்று பரவலின் போது தான் பிரித்தானிய மக்கள் SORN விண்ணப்பத்திற்கு அலைமோதியுள்ளனர்.
பணவீக்கம் 11.1 சதவீதம்
ஆனால் கடந்த அக்டோபரில் மட்டும் 297,770 வாகன சாரதிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் தான் பணவீக்கம் 11.1 சதவீதம் என உச்சம் கண்டது.
@shutterstock
SORN விண்ணப்பம் அளித்து ஒப்புதல் பெற்ற ஒரு சாரதி மாதம் 400 பவுண்டுகள் வரையில் சேமிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட வாகனத்தை மீண்டும் சாலையில் பயன்படுத்துவதாக கண்டறிந்தால், நீதிமன்ற வழக்கை நேரிடும் நிலை ஏற்படுவதுடன் அபராதமாக 2,500 பவுண்டுகள் செலுத்த நேரிடும்.
இந்த நிலையில், ஆய்வு ஒன்றில், பிரித்தானிய சாரதிகளில் 10ல் ஒருவர் தற்போதைய சூழலில் தங்கள் வாகனத்தை SORN முறையில் வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.