Range Rover Defender-ல் 20 நாடுகளை கடக்கும் இந்திய சகோதரர்கள்!
பிரித்தானியாவில் வாழும் இரண்டு இந்திய வம்சாவளி சகோதரர்கள் லண்டனிலிருந்து இந்தியாவின் கேரள மாநிலத்திற்கு காரில் சாலைப் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
ஜூன் 21-ஆம் திகதி தொடங்கிய இப்பயணத்தில் 20 நாடுகள் 20,000 மைல்களை 60 நாட்களில் கடக்க இலக்கு வைத்துள்ளனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியைச் சேர்ந்த நோபி (Noby Paul) மற்றும் அவரது இளைய சகோதரர் ஜோபி (Joby Chamakala) ஆகிய இருவரும் இந்த சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் இருந்து கேரளா செல்லும் இப்பயணத்தில் இரண்டு கண்டங்கள் வழியாக பயணிக்கவுள்ளனர்.
அவர்கள் ரேஞ்ச் ரோவர் டிஃபென்டரில் (Range Rover Defender) தங்கள் பயணத்தை தொடங்கி, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, ஹங்கேரி, குரோஷியா, போஸ்னியா, ஆஸ்திரியா, பல்கேரியா, ஜார்ஜியா, துருக்கி, ருமேனியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, திபெத் மற்றும் நேபாளம் வழியாக பயணிக்க உள்ளனர்.
சாகசத்துடன், ஒரு தொண்டு பணியையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த பயணத்தின் மூலம், நோபியும் ஜாபியும் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் பிரிஸ்டல் மற்றும் பிரிஸ்டலில் உள்ள வெஸ்டன் அறக்கட்டளை ஆகிய அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் சமூக ஊடகங்கள் மூலம் தினசரி அவர்களின் பயணத்தைப் பின்தொடரலாம் மற்றும் நிதி திரட்டலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோபி
நோபியும் அவரது மனைவி ஜோலியும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பிரிஸ்டலில் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு நவோமி, ஜான் பால், ஜோனாஸ் மற்றும் டோபியாஸ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். அனைவரும் பள்ளி மாணவர்கள்.
ஜோபி
அதேபோல், ஜோபியும் அவரது மனைவி சோனியாவும் 23 ஆண்டுகளாக ஆக்ஸ்போர்டில் வசிக்கின்றனர். இவர்களது குழந்தைகள் அன்னா, நியா மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் ஆக்ஸ்போர்டில் பள்ளி மாணவர்கள்.
ஜோபி மற்றும் நோபியின் தாய் மேரியும் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசித்து வருகிறார். நோபியும் ஜோபியும் தங்கள் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |