லாகூர் விமான நிலையம் அருகே தொடர் குண்டு வெடிப்பு - ட்ரோன் தாக்குதலால் பாகிஸ்தானில் பதற்றம்
லாகூர் பகுதியில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றதால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பகுதிகளில், உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்தியா எல்லை பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும், நேற்றைய தாக்குதலின் போது இந்தியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் தெரிவித்தார்.
லாகூரில் தொடர் குண்டு வெடிப்பு
இந்நிலையில், இன்று காலை லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையம் அருகே, அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில், பெரியளவில் கரும்புகைகள் எழுந்தது. அந்த பகுதிகளில் இருந்த சைரன் ஒலிக்க தொடங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வர தொடங்கினர்.
Three blasts reported near Lahore Walton Airport!
— Madhuri Adnal (@madhuriadnal) May 8, 2025
Panic erupts in Pakistan.#Lahore #LahoreAirport pic.twitter.com/qblEbEXBWf
உடனடியாக காவல்துறை மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். 5-6 அடி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பதாகவும், அந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக நள்ளிரவில் லாகூர் கராச்சி, மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |