கிரிக்கெட் மைதானம் மீது ட்ரோன் தாக்குதல் - நாடு திரும்பும் முடிவில் வெளிநாட்டு வீரர்கள்
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ட்ரோன் தாக்குதல் நடைபெறவுள்ள சூழலில், பாகிஸ்தானில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பும் முடிவில் உள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் பதற்றம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவமும், இந்தியாவின் 15 நகரங்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான S-400 சுதர்ஷன் சக்ரா, பாகிஸ்தானின் ஏவுகணைகளை வானிலே அழித்துள்ளது.
இதனையடுத்து, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ரேடார்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் அதனை செயலிழக்க செய்துள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல்
இதனிடையே ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானம் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், மைதானத்தின் ஒரு பகுதியான உணவகம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
पाकिस्तान का रावलपिंडी क्रिकेट स्टेडियम तबाह. भारत ने किए ताबड़तोड़ ड्रोन हमले...आज रात स्टेडियम में होना था मैच.#rawalpindicricketstadium #Pakistan #OperationSindoor #IndiaPakistanWar pic.twitter.com/AyKrIPgps9
— Arvind Sharma (@sarviind) May 8, 2025
இந்த மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு, பெஷாவர் ஜால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் இடையேயான PSL போட்டி நடைபெற இருந்தது.
இதனையடுத்து, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து நடைபெற இருந்த போட்டிகள் கராச்சி நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் வீரர்கள், உடனடியாக அந்த நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியேறும் வீரர்கள்?
இந்த சூழலில் PSL தொடரில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றும் வரும் நிலையில், பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் இருந்து வெளியேற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என 10 க்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானில் உள்ள நிலையில், அவர்கள் இங்கிலாந்து திரும்புவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, PSL கிரிக்கெட் தொடர்ந்து நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |