ட்ரோன் அத்துமீறல் ஐரோப்பியர்களுக்கு போர் அபாயத்தை நினைவூட்டியிருக்கும்: ரஷ்யா வெளிப்படை
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ட்ரோன் அத்துமீறல் நடந்திருப்பது மர்மமாக இருப்பதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெத்வெதேவ் தெரிவித்துள்ளார்.
தொடர்பில்லை
ஆனால், அந்த சம்பவங்கள் போரின் ஆபத்து தொடர்பில் ஐரோப்பியர்களுக்கு நினைவூட்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக செயல்பட்டுவரும் மெத்வதேவ்,
ஜேர்மனி மற்றும் டென்மார் விமான நிலையங்களில் ட்ரோன் அத்துமீறல்களால் ஏற்பட்ட சமீபத்திய இடையூறுகளுக்கும் ரஷ்யாவிற்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா மீது அனுதாபம் கொண்ட ஐரோப்பியர்கள், இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு, தங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்றே மெத்வதேவ் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
காத்திருக்கிறார்கள்
மேலும், அவ்வாறு அனுதாபம் கொண்டவர்கள், உண்மையில் ரஷ்யாவின் உத்தரவுகளுக்காக காத்திருக்கிறார்கள் என்றும் எச்சரித்துள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவே அதிரடியாக கருத்துகளை முன்வைக்கும் மெத்வதேவ்,
ட்ரோன் அத்துமீறல்களால் ஐரோப்பியர்கள் போரின் அச்சுறுத்தல் எப்படியிருக்கும் என்பதை உணர்ந்திருப்பார்கள் என்றார். மேலும் இப்படியான நெருக்கடி நிலைக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் ஜனாதிபதிகளே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |