பேருந்து மீது விழுந்த ட்ரோன் விமானம்! 7 பேர் உயிரிழந்த பரிதாபம்
உக்ரேனிய ட்ரோன் விமானம் பேருந்து மீது தாக்கியதில் டொனெட்ஸ்கில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரேனிய ட்ரோன்
ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில், மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு இணைக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள Simferopol-க்கு சென்று கொண்டிருந்த பேருந்தை உக்ரேனிய ட்ரோன் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணித்தவர்களில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
இதனை கிரெம்ளின் நியமித்த தலைவர் டெனிஸ் புஷிலின் தனது டெலிகிராமில் அறிவித்தார்.
கொல்லப்பட்ட ஊழியர்கள்
சாலையோரத்தில் முற்றிலும் எரிந்துபோன நிலையில், கிடந்த அந்த வாகனத்தின் படங்களை ரஷ்ய அரசு ஊடகங்கள் வெளியிட்டன.
இதற்கிடையில், ரஷ்யாவின் மேற்கு ஸ்மோலென்ஸ்க் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் விமானத் தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவசரநிலை அமைச்சகத்தின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |