துல்லியமான ட்ரோன் தாக்குதல்! ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரைன் அழித்ததா?
ரஷ்யாவின் ரியாசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவுக்கு சொந்தமான ரியாசான் எண்ணெய்(Ryazan Refinery) சுத்திகரிப்பு நிலையம் மீது ஜனவரி 24, 2025 அன்று அதிகாலை தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் நடத்திய கூறப்படும் இந்த ட்ரோன் தாக்குதலில் பரவலாக தீ பரவி பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
🚨 Ryazan, the UAV of democracy struck accurately
— PS01 □ (@PStyle0ne1) January 23, 2025
Several successful hits, it will take days to put out the fire on the oil depot https://t.co/JK8XkxMnLu pic.twitter.com/WxMhRlg62R
ரஷ்ய அதிகாரிகள் சில தாக்குதல் வானூர்திகளை (UAVs) வீழ்த்தியதாக தெரிவித்திருந்தாலும், ஏற்பட்ட சேதத்தின் அளவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
பல்வேறு இணைய தளங்கள் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியான தகவல்களின்படி, இந்த தாக்குதல்கள் உக்ரைனிய படைகளால் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் துல்லியமாக நிகழ்ந்ததாகவும், பரவலாக தீ பரவியதால் தீயை அணைக்க பல நாட்கள் ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சுத்திகரிப்பு நிலையத்தை மட்டுமல்லாமல், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளையும் பாதித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தில் மனித உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று இதுவரை தெரியவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |