ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் ட்ரோன் அச்சுறுத்தல்: கவலையில் பாதுகாப்புத் துறை
ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது பாதுகாப்புத் துறைக்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் கவலை
ஐரோப்பிய நாடுகளில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன்கள் மற்றும் வெடிபொருள் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பல்கேரியாவில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் வெடித்த சம்பவத்தில் தீவிர விசாரணையானது நடைபெற்று வருகிறது.

இந்த ட்ரோன் எங்கிருந்து வந்தது மற்றும் உக்ரைன் போருடன் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நேட்டோ கவின்சில் விவாதிக்கப்படும் என்றும் பல்கேரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டிமித்திரி ஸ்டோயனோவ் தெரிவித்துள்ளார்.
அதைப்போல உக்ரைனுடன் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்ளும் ருமேனியாவும் தொடர்ச்சியான வான்வழி தாக்குதலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
போர் நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் உள்ள நாடுகளில் மட்டும் இத்தகைய ட்ரோன் அத்துமீறல் நடவடிக்கைகள் பதிவாகவில்லை.
உதாரணமாக ஜேர்மனியின் லீப்ஜித் விமான நிலையத்தில் வெடி மருந்துகள் கொண்ட ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டு செயலிழக்க செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவமானது பாதுகாப்பு துறையில் புதிய ஆபத்தை குறிப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |