ட்ரோன்கள் குறுக்கீட்டால் மூடப்பட்ட ஐரோப்பிய நாடொன்றின் விமான நிலையம்
டென்மார்க்கின் வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமான நிலையம், அதன் வான்வெளியில் ட்ரோன்கள் பறந்ததால் மூடப்பட்டுள்ளது.
சுமார் 3 மணி நேரம்
டென்மார்க்கின் முக்கியமான கோபன்ஹேகன் விமான நிலையம் ட்ரோன்கள் காரணமாக மூடப்பட்டு, ஐரோப்பிய வான்பரப்பில் பாதுகாப்பு தொடர்பில் கவலைகளை எழுப்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
கோபன்ஹேகன் விமான நிலையத்தை ட்ரோன்களால் முடக்கியது போன்றே, தற்போதும் நடந்துள்ளது என பொலிசார் தெரிவிக்கின்ற்னார். சுமார் 3 மணி நேரம் ட்ரோன்கள் ஆல்போர்க் விமான நிலைய வான்பரப்பில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கோபன்ஹேகன் விமான நிலையத்தில் நடந்த சம்பவம், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பில் இதுவரை நடந்த மிகக் கடுமையான தாக்குதல் என்று டென்மார்க் நிர்வாகம் செவ்வாயன்று பதிவு செய்துள்ளது.
மட்டுமின்றி, இது ரஷ்ய ட்ரோன் அத்துமீறலுக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டது டென்மார்க்கின் ஆயுதப் படைகளையும் பாதித்தது, அது இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசாரணையில் உள்ளூர் மற்றும் தேசிய காவல்துறையினருக்கு உதவுவதாக டென்மார்க் ஆயுதப்படைகள் தெரிவித்தன. இதனிடையே, திங்கட்கிழமை மாலையில் ட்ரோன் ஒன்று காணப்பட்டதை அடுத்து, நார்வே அதிகாரிகள் ஒஸ்லோ விமான நிலையத்தின் வான்வெளியை மூன்று மணி நேரம் மூடினர்.
ஆதாரமற்றவை
ஆனால், கோபன்ஹேகன் விமான நிலைய சம்பவத்தில் ரஷ்யாவின் தொடர்பு குறித்த சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்று டென்மார்க்கிற்கான ரஷ்ய தூதர் செவ்வாயன்று தெரிவித்தார்.
இதனிடையே, ட்ரோன் விவகாரத்தின் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் விசாரித்து வருவதாகவே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆல்போர்க் விமான நிலையத்தில் பயணிகளுக்கோ அல்லது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |