ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம்
பிரித்தானிய ராயல் நேவியின் தலைமை போர்க்கப்பல் HMS குவீன் எலிசபெத்-ஐ ஜேர்மனியில் ஹாம்பர்க் துறைமுகம் அருகே ஒரு மர்ம டிரோன் பின்தொடர்ந்துள்ளது.
இந்த டிரோன் சுமார் 1.5 மீட்டர் அளவுள்ளதாகவும், ஜேர்மனிய படைகள் HP-47 ஜாம்மர்கள் மூலம் அதனை தடுக்க முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிரோன்கள் குறித்து பரபரப்பு
இதற்கு முன்பாக, பிரித்தானியாவின் RAF Lakenheath, RAF Mildenhall, மற்றும் RAF Feltwell ஆகிய விமானத்தளங்களில் மர்ம டிரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்க விமானப்படை இதை சாதாரண நிகழ்வாக விளக்கினாலும், ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கைகள்
உக்ரைன் தற்போது அமெரிக்க மற்றும் பிரித்தானியாவின் நீண்ட தூர ஏவுகணைகளால் ரஷ்ய இலக்குகளை தாக்கியது.
இதற்கு பதிலாக, ரஷ்யா தனது புதிய ஹைபர்சோனிக் ஏவுகணையை உக்ரைனின் டினிப்ரோ நகரை நோக்கி தாக்கியது.
பிரித்தானியாவின் ஆதரவின் மூலம் ரஷ்யா மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில், இதுபோன்ற ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவதாக ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கேலின் கூறியுள்ளார்.
அவர், “இந்த தாக்குதல்களால் மிகப் பாரிய எதிர்வினைகள் உருவாகும், இது அணுவாயுத நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு வழிவகுக்கும்,” என்று எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரித்தானியாவை 20 நிமிடங்களில் அடையக்கூடிய ஓரேஷ்னிக் (Oreshnik) எனப்படும் ஏவுகணையை தொடர்ச்சியாக சோதனை செய்வதாகவும், அந்த ஏவுகணையை அதிக அளவில் தயாரித்துவருவதாகவும் அறிவித்தார். “உலகில் இதை தடுக்க ஏதுவான எதிர்வினை எதுவும் இல்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அபாயகரமான சூழலில், பிரித்தானியா நேரடியாக போரில் ஈடுபட்டுள்ளதாகவும், இது அணு மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Uk, Drones spotted following British warship in Germany, Royal Navy HMS Queen Elizabeth