பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
நெதன்யாஹு கைது தொடர்பில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர் மற்றும் அமெரிக்க சனாதிபதி லிண்ட்சி கிரஹாம் (Lindsey Graham) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு (Benjamin Netanyahu) மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் கல்லன்ட் (Yoav Gallant) மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த பிடிவாரண்டை செயல்படுத்தும் நாடுகளை பொருளாதாரத் தடை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.
காசாவில் நடைபெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளுக்காக நெதன்யாஹு மற்றும் கல்லன்ட் மீது ICC பிடிவாரண்டு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க குடியரசு கட்சி தலைவர்கள், குறிப்பாக கிரஹாம், கடுமையாகப் பேசினர்.
"தடைச் சட்டம் நிறைவேற்றப்படும்"
கிரஹாம், Fox News இணையதளத்துடன் பேசும்போது, "நெதன்யாஹுவை கைது செய்வதற்கு உதவுகிற நாடுகளை பொருளாதாரத் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாக தண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.
குறிப்பாக, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மற்றும் பிரான்ஸை முன்னிலைப்படுத்தி எச்சரித்தார்.
மேலும், இஸ்ரேலின் தலைவர்களை கைது செய்ய உதவினால், இந்த நான்கு நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்குவோம் எனத் தெரிவித்தார்.
God bless Senator Lindsey Graham.
— Hananya Naftali (@HananyaNaftali) November 23, 2024
He responds to the governments who rushed to comply with the ICC's arrest warrants. pic.twitter.com/jL53rqsdOg
தொடர்ந்து பேசிய கிரஹாம், "அடுத்த கட்ட நடவடிக்கையாக அமெரிக்க தலைவர்களை குறிவைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு எதிராக நாம் நெருக்கமான சட்டத்தை உருவாக்கி, டிரம்ப் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படவேண்டும்," என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Uk Canada France Germany, States of America, USA, US Sanctions, Benjamin Netanyahu arrest warrent, International Criminal Court