வேலை-வாழ்க்கை சமநிலை பெறும் டாப் 10 நாடுகள்., முதலிடத்தில் உலகின் மகிழ்ச்சியான தேசம்
வேலையையும் வாழ்க்கையையும் சமநிலையாக பெறும் தலைதிறந்த 10 நாடுகள் குறித்து இங்கே பாப்போம்.
இப்பட்டியலில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் தான் இடம்பெற்றுள்ளன.
அதில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச நிதி சேவை நிறுவனமான Remitly வெளியிட்ட சமீபத்திய ஆய்வின் படி, உலகின் சிறந்த வேலை-வாழக்கை சமநிலையைப் பெறும் நாடுகளின் பட்டியலில் ஃபின்லாந்து (Finland) முதலிடம் பிடித்துள்ளது.
22 நாடுகளிலிருந்து 4,200 தொழிலாளர்கள் பங்கேற்ற சர்வே அடிப்படையில், வேலை நேரம், பயண நேரம், தூக்க நேரம், இடைவேளை நேரம் போன்றவைகள் மதிப்பீட்டிற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஃபின்லாந்து 100-க்கு 73 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு தொழிலாளர்கள் சராசரியாக 7 மணி 44 நிமிடங்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். பயண நேரம் 41 நிமிடங்கள்; தூக்க நேரம் 6 மணி 47 நிமிடங்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது.
ரெமிட்லி தனது அறிக்கையில், "ஃபின்லாந்து, உலகின் மிக மகிழ்ச்சியான நாடாகவும், சுமார் மூன்று தசாப்தங்களாக வளைவான வேலைகால கொள்கைகளை வழங்கியதாகவும் அறியப்படுகிறது. இது அங்குள்ள மக்கள் வாழ்வை மேலும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் மாற்றுகிறது," என தெரிவித்தது.
இரண்டாவது இடத்தில் டென்மார்க்
டென்மார்க் 70 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு சராசரி வேலை நேரம் ஃபின்லாந்தைப் போலவே குறைந்தது 7 மணி 44 நிமிடங்கள் தான்.
டென்மார்க் OECD Better Life Index மூலம் சிறந்த வாழ்க்கை தரத்திற்காக அறியப்பட்ட நாடாகும்.
மூன்றாவது இடத்தில் ஸ்விட்சர்லாந்து
மூன்றாவது இடத்தில் 65 புள்ளிகளுடன் ஸ்விட்சர்லாந்து உள்ளது. பொருளாதாரத்திலும் வாழ்க்கை தரத்திலும் முன்னணி வகிக்கும் இந்த நாடு, நீண்ட வேலை நேரத்தையும் தனிப்பட்ட நலன்களுடனும் சமநிலைப்படுத்துகிறது.
வேலை-வாழ்க்கை சமநிலையை பெறும் சிறந்த 10 நாடுகள் பட்டியல்:
1. ஃபின்லாந்து (73)
2. டென்மார்க் (70)
3. ஸ்விட்சர்லாந்து (65)
4. பிரான்ஸ் (62)
5. நியூசிலாந்து (60)
6. ஸ்வீடன் (57)
7. நெதர்லாந்து (56)
8. போர்த்துக்கல் (54)
9. பெல்ஜியம் (54)
10. செக் குடியரசு (54)
இந்த ஆய்வின் மூலம், பங்கேற்றவர்களில் 30% பேர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேறு நாடுகளுக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளனர். "இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நாட்டின் வாழ்வியல் தரங்களை ஆராய்வது அவசியம்," என ரெமிட்லி வலியுறுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |