ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல்
ஜேர்மனியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் விமானப் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல்
இந்த ஆண்டில் மட்டும், அதாவது, 2025இல் மட்டும், நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, இதுவரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் 208 முறை இடைஞ்சல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல நேரங்களில் ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பெரும்பாலான இத்தகைய சம்பவங்களில், ட்ரோனை பறக்கவிட்டவர் யார் என்பது தெரியவரவில்லை. இந்த ட்ரோன்களின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என கருதப்படும் அதே நேரத்தில், அனுபவமில்லாத, பொழுதுபோக்குக்காக ட்ரோன் பறக்கவிடுபவர்களும் இந்த பிரச்சினையின் பின்னால் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
கடந்த சில மாதங்களாக, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மர்ம ட்ரோன்கள் தென்படும் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், ஜேர்மனியைப் பொருத்தவரை ஃப்ராங்பர்ட் விமான நிலையம்தான் அதிகம் பாதிக்கப்பட்டது.
ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் மட்டும், நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, 45 முறை ட்ரோன்கள் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |