உக்ரைன் போரில் 80 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணமான ட்ரோன்கள்: வெளிவரும் புதிய தகவல்
உக்ரைனின் போர்க்களங்களில் போருக்கு என வடிவமைக்கப்பட்ட ட்ரோன்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் கொலைக்கருவியாக மாறியுள்ளது.
காரணம் ட்ரோன்கள்
இரு தரப்பிலும் இதுவரையான 80 சதவீத உயிரிழப்புகளுக்கு காரணம் ட்ரோன்கள் என்றே ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,
போரில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பத்து வீரர்களில் எட்டு பேர், இளம் வீரர்களால் இயக்கப்படும் ட்ரோன்கள் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேற்கத்திய அதிகாரிகள் மேலும் தெரிவிக்கையில், ரஷ்ய வீரர்கள் 900,000 க்கும் மேற்பட்டோர் போர்க்களத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 250,000 பேர் இறந்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு போர்க்களத்தில் அதிக எண்ணிக்கையிலான இழப்பு இதுவென்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி, இந்த இழப்புகளை ஈடு செய்ய ரஷ்யாவுக்கு 5 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், 70,000 ரஷ்யர்கள் கை, கால்களை இழந்த நிலையில், போர்க்களத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளனர். தோராயமாக இதே எண்ணிக்கையிலான வீரர்களே பிரித்தானிய இராணுவத்தில் தற்போது சேவையில் உள்ளனர்.
அத்துடன், 10,000 க்கும் மேற்பட்ட டாங்கிகள், 22,000 கவசப் பணியாளர்கள் கேரியர்கள், 26,000 பீரங்கிகள், 700 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள், 28 கப்பல்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் ரஷ்யா இழந்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் 10,500 எண்ணிக்கையில் glide bombs எனப்படும் தற்கொலை ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவியுள்ளனர். சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள இந்த glide bomb ட்ரோன்களை தயாரித்து வருவதாக கடந்த ஆண்டில் ரஷ்யா அறிவித்திருந்தது.
மேலும், உக்ரைன் மீது ஒவ்வொரு நாளும் சுமார் 100 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ட்ரோன் Shahed 238 என்றே கூறுகின்றனர்.
ஆனால் ட்ரோன் தாக்குதல் முன்னெடுப்பதில் உக்ரைன் தரப்பும் தற்போது வலுப்பெற்று வருகிறது. சுமார் 350 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ட்ரோன்களை உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கியுள்ளது.
நோர்வே 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இந்த இரு நாடுகளின் ட்ரோன்களும் ரஷ்யாவில் தற்போதைய 70 சதவீத பாதிப்புகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |