உலக அரிசி சந்தையில் பரபரப்பு: இந்திய அரிசி ஏற்றுமதி விலை குறைவு!
கட்டுப்பாடுகள் தளர்த்தல் மற்றும் அதிக அளவு கையிருப்பு காரணமாக இந்திய அரிசிகளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தல்
அதிக அளவு அரிசி கையிருப்பு காரணமாக, முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி காரணமாக உலக அளவில் விலை குறையுள்ளதை எதிர்பார்த்து அரிசி இறக்குமதியாளர்கள் தங்கள் கொள்முதலை தாமதப்படுத்தி வருகின்றனர்.
இந்த எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில், 5% உடைந்த புழுங்கல் அரிசியின் இந்திய ஏற்றுமதி விலைகள் கடந்த வார விலை வரம்பான $539 - $545 இல் இருந்து $537 - $543 டன்னுக்கு குறைந்துள்ளது.
தாய்லாந்தில் அரிசி கையிருப்பு அதிகரிப்பு
மற்றொரு முக்கிய ஏற்றுமதி நாடான தாய்லாந்திலும், பலவீனமான தேவை மற்றும் அதிக அளவு அரிசி கையிருப்பு காரணமாக, 5% உடைந்த அரிசிக்கான விலைகளை எட்டு மாதங்களில் மிகக் குறைந்த அளவான $570 டன்னாகக் குறைத்துள்ளது.
முக்கிய அரிசி இறக்குமதி நாடான பிலிப்பின்ஸில் சமீபத்தில் இறக்குமதி வரி குறைக்கப்பட்ட போதிலும், அவர்களிடமிருந்தோ அல்லது இந்தோனேசியா போன்ற பாரம்பரிய வாடிக்கையாளர்களிடமிருந்தோ குறிப்பிடத்தக்க அளவிலான ஆர்டர்கள் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் புதிய அரிசி கையிருப்பு வரவு இருப்பதாக சந்தை எதிர்பார்க்கிறது, இது மேலும் விலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இது இறக்குமதியாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம், ஆனால் அரிசி உற்பத்தியாளர்களின் லாப வரம்பில் இது அழுத்தத்தை கொடுக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |