நடுகாட்டுக்குள் உதவி கேட்ட 7 வயது சிறுவன்; சடலமாக கிடைத்த 2 வயது பெண் குழந்தை! பெற்றத் தாய் செய்த காரியத்தால் நேர்ந்த கொடுமை..
அமெரிக்காவில் கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக்கொண்டு, குழந்தைகளை நடுக்காட்டில் விட்டுச் சென்றதில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஸ்கேட்ட கவுண்டி பகுதியில் நடுக்காட்டுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு 7 வயது சிறுவன் அங்கிருந்த ஒரு வேட்டைக்காரரிடம் இழுத்துக்கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுள்ளான்.
அச்சிறுவன் தனது குடும்பத்துடன் இந்த வழியாக வந்ததாகவும், தனது தாய் தன்னையும் தனது தங்கையை காட்டுக்குள் தனியாக விட்டுவிட்டு சென்றதாக கூறியுள்ளான்.
அதன்பிறகு பொலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது.
அப்போது அவர்கள் வந்த டிரக் மிஸிஸிபி ஏரிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து சிறிது துரத்தில் சிறுவனின் தங்கையான 2 வயது குழந்தை சடலமாக கைப்பற்றப்பட்டார்.
விசாரணையில், நார்த் கரோலினா பகுதியைச் சேர்த்த ஜேம்ஸ் மற்றும் ஏமி ஹாரிசன் தம்பதி மிசிசிப்பி வழியாக பயணித்துள்ளனர். அவர்களுடன் 2 வயது பெண் குழந்தையும், ஏமியின் முன்னாள் கணவனுடன் பிறந்த 7 வயது சிறுவனும் பயணித்துள்ளனர்.
அப்போது போதைப்பொருள் தொடர்பாக தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சண்டை முற்றியதில், ஏமி தனது குழந்தைகளை ஜேம்ஸ்சுடன் வண்டியிலேயே விட்டுவிட்டு, இரங்கி வேறொரு நண்பரை வரவழைத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
பின்னர், ஜேம்ஸும் குழந்தைகளை டிராக்கிலேயே தனியாக நடுக்காட்டில் விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் தனியாக வண்டிக்குள் இருந்த குழந்தைகள், இறங்கி உதவி தேடி சென்றுள்ளனர், அப்போது அந்த காட்டுக்குள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் சிறுவன் ஒருவழியாக வேட்டைக்காரரை அணுகினான். ஆனால், 2 வயது குழந்தை hypothermiaவில் இறந்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெற்ற குழந்தைகளை தனியாக தவிக்கவிட்டு சென்றதற்காகவும், 2 வயது குழந்தை இறப்பதற்கு காரணமாக இருந்ததாகவும் அவர்களது தாய் ஏமி ஹாரிசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் ஹாரிசன் எங்கு சென்றார் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. அவரையும் கைது செய்ய பொலிஸார் தேடிவருகின்றனர்.

