நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் முருங்கைக்கீரை சூப்: எப்படி செய்வது?
மழைக்காலத்தில் நோய்களிடமிருந்து நம் உடலை பாதுகாக்க நோய்யெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்று.
இயற்கையாகவே நம் உடலின் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
அந்தவகையில், உடலில் நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சூப்பை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை - 1½ கப்
- அரிசி வேக வைத்த தண்ணீர்- 2 கப்
- சாம்பார் வெங்காய்ம்- 5
- தக்காளி- 1
- பச்சை மிளகாய்- 1
- தேங்காய் பால்- 1 கப்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - ½ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசி வேக வைத்த தண்ணீரை முதலில் பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
பின் அதில் கழுவி சுத்தம் செய்த முருங்கை இலைகளை சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து சிறிதி நேரம் கழித்து இதில் வெங்காயம் , தக்காளி , பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பின் இதனை மூடி சிறு தீயில் முருங்கை இலை வேகும் வரை கொதிக்கவிடவும்.
முருங்கைக்கீரை வெந்ததும் இதில் தேங்காய் பால் மற்றும் கொஞ்சம் இடித்த மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து , உப்பு சேர்த்துக்கொண்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இதற்கடுத்து தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் கொட்டி பின் குடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |