இந்தியரை தாக்கிய கனேடியர்: தொடர்ந்து அதிகரித்துவரும் வெறுப்பு
கனடாவில், குடிபோதையில் இந்தியர் ஒருவரை கனேடியர் ஒருவர் தாக்கும் வீடியோ அதிக கவனம் ஈர்த்துள்ளது.
அதிகரித்துவரும் இனவெறுப்பு
கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில், இந்தியர் ஒருவரின் கார் மீது சிறுநீர் கழித்த கனேடியரை தட்டிக்கேட்டதால் அவர் அந்த இந்தியரை அடித்துக் கொன்றேவிட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், ரொரன்றோவிலுள்ள கஃபே ஒன்றில், இந்தியர் ஒருவரை கனேடியர் ஒருவர் தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

தன் பாட்டுக்கு நின்றுகொண்டிருந்த அந்த இந்தியரின் மொபைலை அந்த கனேடியர் பிடுங்கி எறிய, அவர் அமைதியாக தன் மொபைலை எடுக்க, அவரை நெருங்கிய அந்த கனேடியர், நீ என்ன பெரிய ஆளா, என்னிடமே தோரணை காட்டுகிறாயா என்னும் ரீதியில் கேள்வி எழுப்ப, இதனால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படலாம் என்கிறார் அந்த இந்தியர்.
உடனே அவரைப் பிடித்துத் தள்ளிய அந்த கனேடியர், அவரது சட்டையைப் பிடித்து அவரை சுவருடன் சேர்த்துத் தள்ளிப் பிடித்துக் கொண்டு மிரட்ட, அந்த கஃபே ஊழியர் ஒருவர் தலையிட்டு தயவு செய்து வெளியே போங்கள் என அந்த கனேடியரை மன்றாடிக் கேட்டுக்கொள்ள, ஒருவழியாக வெளியே செல்கிறார் அந்த கனேடியர்.
A shocking video has surfaced showing a drunk Canadian man attacking an Indian man simply because he believes the Indian is acting superior. Until Indians abroad stand up to bullies like this, they will be run over again and again and remain easy targets. Don’t let fear silence… pic.twitter.com/JwtZ0ghYrh
— Meru (@MeruOnX) November 3, 2025
ஆக, சும்மா நின்றாலே, புலம்பெயர்ந்தோரைக் கண்டாலே கைநீட்டும் அளவுக்கு கனடாவில் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு அதிகரித்துவருவதைக் கண்கூடாக காணமுடிகிறது.
சமீபத்தில் Arvi Singh Sagoo (55) என்னும் இந்தியரின் கார் மீது சிறுநீர் கழித்த Kyle Papin (40) என்னும் கனேடியரை அவர் தட்டிக்கேட்டதால், அவர் அந்த இந்தியரை அடித்த அடியில் அவர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |