அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபர்: துரத்திப் பிடித்த பொலிசார்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், அரசு பேருந்தை ஒருவர் திருடிச் செல்ல, பொலிசார் அவரை துரத்திப் பிடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபர்
தெலங்கானா மாநிலத்தில், பேருந்து நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றைக் காணாத அலுவலர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மூலம் பேருந்து பயணிக்கும் இடத்தை அறிந்துகொண்ட பொலிசார் பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.
🚨Shocking! A man allegedly stole a parked #TGSRTC bus from #Korutla bus stand in #Jagtial, triggering an 18-km police chase. After ramming vehicles, the bus crashed near #Metpalli. Accused Sambayya was arrested. Motive under probe. #Telangana Crime @TGSRTCHQ #Crime #Sambayya pic.twitter.com/W74GiFqriR
— Rajesh Kumar Reddy E V (@rajeshreddyega) July 22, 2026
பேருந்தை இயக்கிய நபர் கண்மூடித்தனமாக பேருந்தை இயக்கியதுடன், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோத, சாலையில் பயணித்துக்கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகள் திகிலடைந்துள்ளனர்.

ஒரு இடத்தில் பொலிசார் சாலையின் குறுக்கே தடுப்புகளை ஏற்படுத்த, பேருந்து தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த மரம் ஒன்றில் மோதி நின்றுள்ளது.

ஏற்கனவே பொலிசார் 18 கிலோமீற்றர் தூரம் பேருந்தை துரத்திப் பிடித்த நிலையில், பேருந்து நின்றதும் அதிலிருந்த அந்த நபர் பேருந்திலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளார்.
மீண்டும் பொலிசார் அவரை துரத்திப் பிடித்த நிலையில், அவர் மது போதையிலிருந்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பேருந்து நிலையத்தில் நுழைந்து ஒருவர் யாருக்கும் தெரியாமல் பேருந்தை வெளியே எடுத்துச் சென்றது எப்படி என்னும் கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |