மீண்டும் தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்

Thoothukudi Tamil Nadu Police
By Karthikraja Jul 23, 2026 09:01 AM GMT
Report

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் உயிரிழந்துள்ள நிலையில், காவல்துறை விளக்கமளித்துள்ளது.

தொடரும் காவல் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் குட்கா வழக்கில் விசாரணை கைதியாக இருந்த சபரிவர்மன், கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மீண்டும் தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம் | Thoothukudi Arunchalam Dies After Police Enquiry

முதலில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கடுமையான தாக்குதல் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.

சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூவர் மற்றும் 8 கைதிகள் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்

ஜனநாயகன் படம் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்

தூத்துக்குடியில் அருணாச்சலம் உயிரிழப்பு

இந்நிலையில், தூத்துக்குடியில் ஒரு விசாரணை கைதி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி, அமுதா நகரை சேர்ந்த 27 வயதான அருணாச்சலம் அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். 

மீண்டும் தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம் | Thoothukudi Arunchalam Dies After Police Enquiry

கடந்த 17ஆம் தேதி கடையை மூடிய பின்பும், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக தென்பாகம் காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதே நாளில் உங்களது மகன் மயங்கி விழுந்து விட்டதாக அருணாச்சலத்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 4 காவலர்கள் எனது மகனை அடித்து கொன்று விட்டதாக அருணாசலத்தின் தாய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், எனது மகனை 4 காவலர்கள் அடித்ததாக அவன் தெரிவித்தான். எனது மகனுக்கு இதற்கு முன்பு வலிப்பு வந்ததே இல்லை. எனக்கு நீதி வேண்டும். அந்த 4 காவலர்கள் வர வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.

மேலும், அருணாச்சலம் காவலர்கள் தன்னை அடித்ததாக மருத்துவமனையில் இருந்தபடி பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

காவல்துறை விளக்கம்

இந்நிலையில், அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாச்சலத்தை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாச்சலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம்.

மயங்கி விழுந்த அருணாச்சலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை அடிக்கவில்லை, இது லாக்-அப் மரணம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கனிமொழி கண்டனம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, "நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. 

மீண்டும் தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம் | Thoothukudi Arunchalam Dies After Police Enquiry

காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! 

நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US