உடல் ஆரோக்கியத்திற்கும், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கும் இந்த ஒரு லட்டு போதும்: எப்படி தயாரிப்பது?
உலர் பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த லட்டு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான லட்டு ஆகும்.
இதனை குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கும், நீளமான முடி வளர்ச்சிக்கும் உதவும் இந்த Dry fruits லட்டை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கசகசா- 2 ஸ்பூன்
- நெய்- 3 ஸ்பூன்
- பாதம்- 1/4 கப்
- முந்திரி- 1/4 கப்
- வால்நட்- 1/4 கப்
- பிஸ்தா- 1/4 கப்
- பூசணி விதை- 1 கைப்பிடி
- முலாம்பழ விதை- 1 கைப்பிடி
- ஜாதிக்காய் பொடி- 1/4 ஸ்பூன்
- கருப்பு பேரிச்சம்பழம்- 10
- ஏலக்காய் தூள்- 1/2 ஸ்பூன்
- தேங்காய் துருவல்- 1/2 கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கசகசா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் 3 ஸ்பூன் நெய் சேர்த்து பாதம், முந்திரி, வால்நட், பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அதே வாணலில் உள்ள நெய்யில் பூசணி விதை மற்றும் முலாம்பழ விதை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின் அதில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துள்ள கொள்ளவும்.
அடுத்து அதே வாணலில் உள்ள நெய்யில் ஜாதிக்காய் பொடி, கருப்பு பேரிச்சைப்பழம் மற்றும் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ்களை ஆறவைத்து பொடி பொடியாக நறுக்கி வதக்கி வைத்துள்ள பேரீட்சைப்பழம் கலவையுடன் சேர்க்க வேண்டும்.
அந்த கலவையில் வறுத்து வைத்துள்ள கசகசாவை சேர்த்து பிணைந்து உருண்டை பிடித்தல் ஆரோக்கியம் நிறைந்த Dry fruits லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |