பிரம்மாண்டமாக நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி! பிரபல பாப் பாடகி இல்லையா? வெளியான தகவல்
அகமதாபாத்தில் நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான கலை நிகழ்ச்சியில், பிரித்தானிய பாப் பாடகி துவா லிபா இடம்பெறமாட்டார் என தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்தப் போட்டியின்போது பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ் ஆகியோர் இறுதிப் போட்டியை கண்டுகளிக்க உள்ளனர்.
அதேபோல் போட்டிக்கு முன்பாகவும், இன்னிங்ஸ் இடைவெளியிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
துவா லிபா
இதில் பிரித்தானிய பாப் பாடகி துவா லிபா பங்குபெறுவார் என்று செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் துவா லிபாவின் பெயர் இடம்பெறவில்லை.
பதிலாக பிரீதம் சக்ரபர்தி, ஜோனிதா காந்தி, ஆதித்யா கட்வி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
GETTY IMAGES
Manas Khuman
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |