இதயங்களை நொறுக்கிய உலகக்கோப்பை இறுதிப்போட்டி! அவுஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா?
2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, 20 ஆண்டுகால வேதனைக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைக்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
பகையை முடிக்கும் போட்டி
அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், 19ஆம் திகதி இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடைலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கோ இது 20 ஆண்டுகால பகையை முடிக்கும் போட்டி ஆகும்.
ஆம், 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.
Getty
அந்த தொடரில் அவுஸ்திரேலியாவிடம் மட்டுமே லீக்கில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, ஏனைய அணிகளை வீழ்த்தி மிரட்டலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 360 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 234 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி கோப்பையை பறிகொடுத்தது.
Getty
நொறுங்கிய இதயங்கள்
இந்த தோல்வி அச்சமயத்தில் இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று நம்பியிருந்தனர்.
அதன் காரணமாகவே ரிக்கி பாண்டிங் தனது பேட்டில் ஸ்பிரிங் வைத்திருந்தார், அதனால் தான் அவர் 140 ஓட்டங்கள் விளாசினார் என்றும் வதந்திகள் பரவின.
அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பின்னர், அந்த அணிக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி என்ற கோணத்திலேயே பார்க்கத் தொடங்கினர்.
டிராவிட்டின் படை கோப்பையை வெல்லுமா?
இந்த நிலையில் தான் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் 20 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
அப்போது இந்திய அணியில் விளையாடிய ராகுல் டிராவிட் தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ளார்.
எனவே, அணி வீரராக பறிகொடுத்த கோப்பையை டிராவிட் பயிற்சியாளராக மீட்டெடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Reuters
வலுவான இந்திய அணி
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவை வீழ்த்தக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளும் இந்திய அணிக்கு உள்ளது என்பதை இதுவரை நடத்த போட்டிகளிலேயே நமக்கு தெரிய வந்துள்ளது.
PTI/R Senthil Kumar
அதிலும் குறிப்பாக இந்தியாவில் இந்தப் போட்டி நடப்பதால் மைதானத்தில் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவு இந்திய அணிக்கே இருக்கும். இது மனோரீதியாக அவுஸ்திரேலிய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீரர்களைப் பொறுத்தவரை இந்திய அணி பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என மூன்றிலும் வலுவாக உள்ளது. முதல் பேட்டிங், இரண்டாவது பேட்டிங் என்பது இந்திய அணியை பாதிக்காது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
PTI/R Senthil Kumar
ரோகித் சர்மா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் துடுப்பாட்டத்திலும், ஷமி, சிராஜ், குல்தீப் ஆகியோர் பந்துவீச்சிலும் மிரட்டி வருகின்றனர். இதனால் அவுஸ்திரேலியா பாரிய இலக்கை நிர்ணயித்தாலும், சேஸிங்கில் ஈடுபட்டாலும் இந்திய அணி எளிதாக சமாளிக்கும் எனலாம்.
எனவே, இந்திய அணி 20 ஆண்டுகளுக்கு பின் இம்முறை அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |