இந்தியா vs அவுஸ்திரேலியா: 2023 உலகக் கோப்பையில் ரூ.131 கோடி பரிசுத் தொகையை வெல்லப்போவது யார்?
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியாளருக்கான பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
வெற்றி பெரும் அணி குறைந்தபட்சம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 131 கோடி) பரிசுத்தொகையை பெரும்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.65 கோடி) வழங்கப்படும். இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறும் அனைத்து 48 போட்டிகளுக்கும் பரிசுத் தொகை மற்றும் ஊக்கத்தொகையை ஐசிசி முன்னதாக வெளியிட்டது.
அரையிறுதியில் தோல்வியடையும் இருவருக்கு தலா 800,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 26 கோடி) வழங்கப்படும்.
நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெறத் தவறிய மற்ற ஆறு அணிகளுக்கு தலா 100,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் தோராயமாக ரூ. 3.3 கோடி) வழங்கப்படும், அதே சமயம் ஒவ்வொரு குழு நிலை ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு 40,000 டொலர் (சுமார் ரூ. 1.3 கோடி) ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
போட்டி முழுவதும் வெற்றிபெறும் அனைத்து அணிகளுக்கும் ஐசிசி மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பணமதிப்பில் ரூ. 329 கோடி) வழங்கும். போட்டியை அதிக அளவில் நடத்துவதுடன், வீரர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் உயர்மட்டக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போது, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, இந்திய மாநிலம் குஜராத்தில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றுவருகிறது.
அக்டோபர் 5-ஆம் திகதி தொடங்கிய உலக கோப்பை நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் 45 லீக் போட்டிகள் மற்றும் மூன்று நாக் அவுட் போட்டிகள் அடங்கும். ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையின் 13வது பதிப்பு இது மற்றும் 10 அணிகள் - இந்தியா, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் நெதர்லாந்து, போட்டியில் பங்கேற்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ICC Cricket World Cup 2023 prize money, US Dollars, world cup 2023 finals, India vs Australia, india vs australia world cup final 2023