இரட்டை குடியுரிமை பெற்றவரா? உங்கள் அவுஸ்திரேலிய உரிமைகளை இழக்க நேரலாம்
அவுஸ்திரேலியாவில் வரி செலுத்தி, வாக்குரிமையும் பெற்றுள்ள பலர், அவர்களுக்கு தெரியாமலேயே இரட்டை குடியுரிமையில் ஒன்றை இழக்கலாம் என கூறப்படுகிறது.
குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 17 ரத்து
அவுஸ்திரேலியாவின் 1948 குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 17 ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்படலாம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 பேர்கள் தங்கள் அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கின்றனர்.
@ABC News
2002ல் பிரிவு 17 ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாக கூறப்படுவது, இங்கிலாந்துக்கு திரும்பியவர்கள் பிரிட்டிஷ் குடியுரிமையை பெற்றுக்கொண்டு ஐரோப்பாவில் சுதந்திரமாக பயணம் செய்வதற்கான வாய்ப்பை விரும்பியதாலையே இந்த மாறுதல் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய குடியுரிமையை கைவிட முடிவு செய்பவர்கள் மீது மட்டுமே அந்த விதியை பயன்படுத்தினால் போதும் என்ற கோரிக்கையும் அப்போது முன்வைக்கப்பட்டது.
1984 முதல் 2002 வரையில் வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதுடன், அவர்களின் முந்தைய குடியுரிமை தக்கவைக்கலாம். இதனால் அவர்கள் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாகின்றனர்.
ஆனால் அவுஸ்திரேலியாவில் பிறந்த மக்கள் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றுவிட்டு அவுஸ்திரேலிய குடியுரிமையை தக்கவைக்க முடியாது. வெளிநாட்டில் இருப்பவர்கள், அவர்களின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டு, இரண்டாவது குடியுரிமையை நம்பி இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
மீண்டும் விண்ணப்பிக்கலாம்
மேலும், குடியுரிமை முடிவடையும் சூழலில் அவுஸ்திரேலிய கடற்பகுதியில் இருப்பவர்களுக்கு, சட்டத்தின் கீழ் தானாக முன்னாள் குடிமகன் விசா வழங்கப்படுகிறது. மட்டுமின்றி, நிரந்தர குடியுரிமை ஒன்றும் அளிக்கப்பட்டு வருகிறது,
@ABC News
ஆனால் அந்த நபர் எப்போது நாட்டைவிட்டு வெளியேறுகிறாரோ அப்போது அந்த நிரந்தர குடியுரிமை விசா காலாவதியாகிறது. அவர் மீண்டும் எப்போது நாடு திரும்புகிறாரோ, அப்போது அவர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவுஸ்திரேலியாவில் இருக்கும் போது குடியுரிமையை இழந்தவர்கள், மீண்டும் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கட்டணமாக 200 டொலர் செலவாகும் என்பதுடன், உளவிவகார அமைச்சகத்திடம் தம்மை நிரூபிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.