இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Citizenship England
By Balamanuvelan Feb 14, 2026 05:29 AM GMT
Report

இம்மாதம், அதாவது, 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள், தங்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய குடியுரிமையும் மற்றொரு நாட்டின் குடியுரிமையும் என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், பிரித்தானிய பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு | Dual Nationals Denied Entry To Uk British Passport

விடயம் என்னெவென்றால், பிரித்தானியர்கள் பல நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். உதாரணமாக, ஸ்பெயின் நாட்டில் வாழும் பிரித்தானியர்கள், தங்கள் பிரித்தானியக் குடியுரிமையைத் துறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஸ்பெயின் குடியுரிமை கிடைக்கும்.

அதுபோல, ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இதுவரை எந்த பிரச்சினையுமின்றி பல நாடுகளுக்கு பயணித்து, பிரித்தானியாவுக்கு திரும்பி வந்தார்கள்.

அப்படி பிரித்தானிய மற்றும் இத்தாலி நாட்டு இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர், தற்போது பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பிப்ரவரி 25ஆம் திகதிக்குப் பிறகுதான் பிரித்தானியாவுக்குத் திரும்புவார். 

எப்ஸ்டீனின் விமானத்தில் பயணம்... இளம் பெண்ணுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ

எப்ஸ்டீனின் விமானத்தில் பயணம்... இளம் பெண்ணுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ

ஆக, அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பும்போது, அவரிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லாததால் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் இந்த திடீர் முடிவால், வெளிநாடுகளில் வாழும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஏராளம் பிரித்தானியர்கள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.

அப்படி சிக்கலை சந்திக்க உள்ளவர்கள், 589 பவுண்டுகள் கொடுத்து, ’certificate of entitlement’ என்னும் சான்றிதழை வாங்கவேண்டும் என்கிறது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

பிரித்தானியா மற்றும் மற்றொரு நாட்டின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள், அவர்களிடம் பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லையென்றால், இந்த certificate of entitlement என்னும் சான்றிதழை வாங்கி, அதை தங்களிடம் இருக்கும் பாஸ்போர்ட்டில் இணைத்துக்கொள்ளவேண்டும். 

இரட்டைக் குடியுரிமை கொண்ட பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு | Dual Nationals Denied Entry To Uk British Passport

அப்படி அந்த certificate of entitlementம், பிரித்தானிய பாஸ்போர்ட்டும் இல்லாத இரட்டைக் குடியுரிமை கொண்டர்கள் பிரித்தானியாவுக்கு வரும் படகு, விமானம் அல்லது ரயில் எதிலுமே ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த திடீர் விதி, வெளிநாடுகளில் வாழும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஏராளம் பிரித்தானியர்களை எரிச்சலடையச் செய்துள்ளது.

பிரித்தானியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கிறது. அப்படி இருந்தும், பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லாவிட்டால் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கமாட்டோம் என்பது வேடிக்கையாக உள்ளது என்கிறார்கள் சிலர்.

சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தப்போகிறோம் என துவங்கி, புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் என்னும் பெயரில் புதிய விதிகளை அறிமுகம் செய்துவந்த பிரித்தானியா, தற்போது பிரித்தானிய குடியுரிமை கொண்டவர்களுக்கே இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பதைப் பார்த்தால், பிரித்தானியா எதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US