சரவெடி ஆட்டமாடிய ரோவ்மன் பவல்: துபாய் கேபிட்டல்ஸ் அதிரடி வெற்றி
ILT20 தொடர் போட்டியில் துபாய் கேபிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணிகள் மோதின.
ஓமர்சாய் விளாசல்
முதலில் ஆடிய கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 156 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Rovman, that ball’s still out there applying for a visa! 🌐#GGvDC #DPWorldILT20 #WhereTheWorldPlays #AllInForCricket pic.twitter.com/FmThN2l4OX
— International League T20 (@ILT20Official) December 21, 2025
அஸ்மதுல்லா ஓமர்சாய் 26 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் வின்ஸ் 36 (34) ஓட்டங்களும், குர்பாஸ் 11 பந்துகளில் 25 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தனர்.
முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், ஹைதர் அலி 2 விக்கெட்டுகளும், நபி மற்றும் நீஷம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 
ரோவ்மன் பவல் அதிரடி
பின்னர் களமிறங்கிய துபாய் கேபிட்டல்ஸ் அணியில் அடல் 9 ஓட்டங்களிலும், காக்ஸ் ஓட்டங்கள் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
எனினும், ஷாயன் ஜஹாங்கீர் 48 (44) ஓட்டங்களும், ப்ளூய் 22 (15) ஓட்டங்களும் எடுத்தனர். அடுத்து கைக்கோர்த்த ரோவ்மன் பவல் மற்றும் மொஹம்மது நபி கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
துபாய் கேபிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரோவ்மன் பவல் (Rovman Powell) 31 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 47 ஓட்டங்களும், நபி 14 பந்துகளில் 25 ஓட்டங்களும் விளாசினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |