வரும்காலத்திற்கான அருங்காட்சியகம் திறப்பு: கண்கவரும் புகைப்படங்கள்!
2071ஆம் ஆண்டுக்கான துபாயின் முன்மாதிரி அருங்காட்சியத்தை, அந்தநாட்டின் பட்டத்து அரசர் ஷேக் முகமது பின் ரஷித் திறந்துவைத்துள்ளார்.
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவிற்கு அருகில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான வருங்காலத்தின் அருங்காட்சியகத்தை அந்த நாட்டின் பட்டத்து அரசர் ஷேக் முகமது பின் ரஷித் திறந்துவைத்துள்ளார்.
சில்வர் முலாம் பூசப்பட்டு அரபிக் எழுத்துக்கள் நிறைந்த இந்த 7 மாடிகள் கொண்ட கட்டிடம், 2071ஆம் ஆண்டுக்கான துபாயின் முன்மாதிரி வடிவங்களை எடுத்துரைக்கும் என கூறப்பட்டள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் நவீன தொழிநுட்பங்கள் விஞ்ஞான யுக்திகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்கு இந்திய மதிப்பில் 3 ஆயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரமாண்டமான கட்டிடம் திறப்புவிழாவை முன்னிட்டு வண்ணவிளக்குகளால் ஒளிரவிடப்பட்டன.




