2022ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடம் எது? வெளியாகியுள்ள பட்டியல்

London Paris Hurghada
By Balamanuvelan Jan 19, 2022 11:26 AM GMT
Report

2022ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடங்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tripadvisor என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியல், சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்லும் உலகின் பல்வேறு பகுதிகளில் எந்த பகுதிகள் மிக மிகச் சிறந்தவை என்பதைக் கூறுகிறது.

சுற்றுலாப்பயணிகள் விரும்பும் பிரபலமான இடங்கள், மக்கள் தற்போது அதிகம் செல்ல விரும்பும் பகுதிகள், வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியிடங்களுக்கு செல்வோருக்கு பிடித்த இடங்கள், பல்வேறு உணவுகளை விரும்புவோருக்கு பிடித்த இடங்கள், பனிச்சறுக்கு விளையாட விரும்புவோருக்கு பிடித்த இடங்கள் மற்றும் நகரங்களை விரும்புவோருக்கு பிடித்த இடங்கள் என ஏழு பிரிவுகளின் கீழ் பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

2020 நவம்பர் 1ஆம் திகதி முதல், 2021 அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தின்போது, உலகின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றவர்கள் அந்த இடங்களைக் குறித்து தெரிவித்த மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக அனைத்துக் காரணிகளையும் பார்க்கும்போது, பட்டியலில் உலகிலேயே முதலிடம் பிடித்துள்ளது துபாய் ஆகும். லண்டன், ஐரோப்பா என்ற பிரிவில் முதலிடத்தையும், மொத்தமாக உலகம் முழுவதிலும் என்று பார்க்கும்போது இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, உலகப் பட்டியலில் மெக்சிகோவிலுள்ள Cancun மூன்றாவது இடத்தையும், இந்தோனேசியாவிலுள்ள பாலி நான்காவது இடத்தையும், கிரேக்கத்தீவுகளில் Crete ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அமெரிக்காவைப் பொருத்தவரை லாஸ் ஏஞ்சல்சுக்கு மட்டுமே பட்டியலில் ஓரளவுக்கு உயர்ந்த இடம், ஆம், அது 25ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களுக்குள் வந்த மற்ற இடங்கள், ரோம் (ஆறாவது இடம்), மெக்சிகோவின் Cabo San Lucas (ஏழாவது இடம்), துருக்கி தலைநகரமான இஸ்தான்புல் (எட்டாவது இடம்), பாரீஸ் (ஒன்பதாவது இடம்) மற்றும் எகிப்திலுள்ள Hurghada (பத்தாவது இடம்) ஆகியவையாகும். அதாவது, 2020 நவம்பர் 1ஆம் திகதி முதல், 2021 அக்டோபர் 31 வரை உலகச் சுற்றுலா சென்றவர்கள், இந்த இடங்களை சிறந்த இடங்கள் என தெரிவித்துள்ளதன் அடிப்படையில், 2022இல் சுற்றுலா செல்வோர் எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை இந்த பட்டியலைப் பார்த்து முடிவு செய்துகொள்ளலாம்.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US