உலகின் முதல் தங்கத்திலான தெரு - எந்த நாட்டில் தெரியுமா?
உலகின் முதல் தங்கத்திலான தெரு துபாயில் அமைய உள்ளது. துபாய் நீண்ட காலமாக தங்கத்திற்கான உலகளாவிய மையமாக இருந்து வருகிறது.
2024-25 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம், சுமார் 53.41 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது.
துபாய் தங்க தெரு
இந்த நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தங்க மாவட்டத்தில்(Dubai Gold District), உலகின் முதல் தங்கத்திலான தெருவை(Gold Street) உருவாக்க உள்ளதாக இத்ரா துபாய் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் கட்டுமான திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் மற்றும் நகை சில்லறை விற்பனை, மொத்த வர்த்தகம், பொன் சேவைகள் மற்றும் முதலீட்டு தொடர்பான வணிகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு பரந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக தங்க தெரு அமையும் என இத்ரா துபாய் தெரிவித்துள்ளது.
இங்கு ஏற்கனவே, தங்கம், நகைகள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாழ்க்கை முறை பிரிவுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர்.

மேலும், ஜவ்ஹாரா ஜூவல்லரி, மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ், அல் ரோமைசான் மற்றும் தனிஷ்க் ஜூவல்லரி ஆகிய பிரபல பிராண்ட்களும் இங்கே தனது கடையை அமைக்கும்.
ஜோயாலுக்காஸ் 24,000 சதுர அடி பரப்பளவில் மத்திய கிழக்கில் தனது மிகப்பெரிய கடையை இங்கே திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், அங்கே வரும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக 1000க்கும் மேற்பட்ட அறைகளை உடைய 6 ஹொட்டல்களை திறக்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |