சொகுசு கார், பங்களா, வைர நகைகள்: துபாய் பெண்ணின் பிரசவ பரிசு வீடியோ வைரல்!
சொகுசு கார், பங்களா, வைர நகைகள் என துபாய் பெண்ணின் பிரசவ பரிசு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துபாயைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் பதிவர் மலாய்கா ராஜா(Malaikah Raja), தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் போது கணவரிடமிருந்து பெற்ற ஆடம்பர பரிசுகளின் வீடியோவை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.
இந்த வீடியோவில், அவர் பெற்ற பிரம்மாண்டமான பரிசுகளைக் கண்டு ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
வீடியோவில் என்ன இருக்கிறது?
வீடியோவின் ஆரம்பத்தில், மலாய்கா ராஜாவும் அவரது கணவரும் ஒன்றாக நிற்கின்றனர். பின்னர், அவர் பெற்ற "புஷ் பிரசன்ட்ஸ்”("push presents") எனப்படும் பிரசவ பரிசுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
முதலாவதாக, தனிப்பயனாக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற மெர்சிடஸ் ஜி-வேகன்(G-Wagon) கார் பரிசாகக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிரம்மாண்டமான புதிய வீடு பரிசாகக் கிடைத்தது.
வீடியோவில் மேலும் பல ஆடம்பர பரிசுகள் இடம்பெற்றுள்ளன. 100,000 டொலர் மதிப்புள்ள 8 டியோர் கைப்பைகள்(Dior bags), 80,000 டொலர்கள் மதிப்புள்ள வைர காப்பு வளையல்கள், மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய மசாஜ்களுக்காக 10,000 டொலர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இன்னும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது குழந்தைக்கு மாதந்தோறும் 50,000 டொலர் ஆடைக் கொடுப்பனவு(clothing budget), தனக்கு 200,000 டொலர் டென்னிஸ் வளையல்(tennis bracelet), மற்றும் தனது புதிதாகப் பிறந்த மகளுக்கு 70,000 டொலர் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
வைரல் வீடியோ
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே, 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், கிட்டத்தட்ட அரை மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
சமூக ஊடக பயனர்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் மலாய்கா ராஜாவின் அதிர்ஷ்டத்தைக் கண்டு வியந்துள்ளனர், மற்றவர்கள் இவ்வளவு ஆடம்பர வாழ்க்கை முறையை விமர்சித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |