துபாயில் 6.5 கிலோ தங்கத்தில் உருவான விலை உயர்ந்த ரங்கோலி
Dubai’s 6.5kg Gold Rangoli Amazes Visitors: துபாயில் 6.5 கிலோ தங்கத்தில் உருவான ரங்கோலி பார்வையாளர்களை வியக்க வைத்தது.
6.5 கிலோ தங்கத்தில் உருவான ரங்கோலி
துபாயில் இந்திய கலாச்சாரத்தின் அழகையும், தங்க நகை கைவினைப் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 6.5 கிலோ தங்க கோலம் (ரங்கோலி) பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Dubai’s first-ever rangoli made entirely out of gold! ✨💛 Damas unveiled this stunning 2x2-metre Golden Rangoli at City Centre Deira, crafted using an incredible 6.5kg of gold & diamond jewellery featuring 213 jewellery pieces. 🎥IG: gulfbuzz and dubaifestivals #VisitDubai https://t.co/mxfdutKi6u
— Visit Dubai IN (@VisitDubai_IN) November 9, 2026
இந்த பிரம்மாண்ட படைப்பை பிரபல நகை நிறுவனமான Damas துபாயின் City Centre Deira வளாகத்தில் நவம்பர் 6 அன்று காட்சிப்படுத்தியது.
நடிகை தமன்னா பாட்டியா இந்த சிறப்பு கோலத்தை திறந்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 2 × 2 மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த கோலம், மொத்தம் 213 தங்க நகை பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 6.5 கிலோ ஆகும். வழக்கமாக கலர் பொடிகள் மற்றும் மலர்களால் உருவாக்கப்படும் ரங்கோலிக்கு பதிலாக, தங்க நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள் மற்றும் மோதிரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

தீபாவளி பண்டிகையுடன் தொடர்புடைய செல்வசெழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வடிவங்கள் மற்றும் சீரான அலங்கார அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த கலைப்பணியை உருவாக்க 10 பேர் கொண்ட குழு தொடர்ந்து 16 மணி நேரம் உழைத்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நகையும் கையால் கவனமாக அடுக்கி வைக்கப்பட்டு இந்த கண்ணைக் கவரும் வடிவம் உருவாக்கப்பட்டது. இந்த தங்க ரங்கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் இதனை “அற்புதமான கலைப்பணி” என்றும், “துபாயில் மட்டுமே சாத்தியமான காட்சி” என்றும் பாராட்டியுள்ளனர்.
துபாய் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்படும் Dubai Festivals and Retail Establishment அமைப்புடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நகரம் முழுவதும் நடைபெற்று வரும் “Festival of Lights” கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தங்க கோலம் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |