கடைசி ஓவரில் தோனி போல்டானதால் நிசப்தமான மைதானம்..ஆனால் அவுட் இல்லை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 144 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்கத்தில் சொதப்பிய வீரர்கள்
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாடியது.
கெய்க்வாட் 17 ஓட்டங்களிலும், ரஹானே 16 ஓட்டங்களிலும் வருண் ஓவரில் ஆட்டமிழந்தனர். வழக்கமாக அதிரடி காட்டும் டெவோன் கான்வே இன்றைய போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 4 ஓட்டங்களில் நரைன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
Maximum ft. Shivam! pic.twitter.com/ZLvLhQAqcK
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
செக் வைத்த சுனில் நரைன்
அடுத்து வந்த மொயீன் அலியை ஒரு ரன்னில் நரைன் வெளியேற்றினார். இதனால் சென்னை அணி 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என தடுமாறியது. அப்போது அதிரடி காட்டிய ஷிவம் தூபே சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
மறுமுனையில் தடுமாறிய ஜடேஜா 24 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார்.
@KKRiders (Twitter)
தோனி போல்டு
பின்னர் களமிறங்கிய தோனி பிரீ ஹிட் பந்தை எதிர்கொண்டபோது போல்டானார். அப்போது மைதானமே நிசப்தமானது. கடைசி பந்தில் அவர் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
#ThalaDharisanam becoming our matchday routine! ?#CSKvKKR #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/wO0lEQyH1u
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023
தூபே 34 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 48 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார். வருண் சக்கரவர்த்தி மற்றும் நரைன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
Unbowed and unbeaten! ??#CSKvKKR #WhistlePodu #Yellove ?? @IamShivamDube pic.twitter.com/BhJN2phbO4
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2023