டப்ளினில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்: முகத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிய நபர்
Dublin Traffic Assault MB Michael Healy Rea Recovers: அயர்லாந்தின் டப்ளின் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட எம்.பி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்
அயர்லாந்தின் டப்ளின் நகரில் புதன்கிழமை மாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட சுயேச்சை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைக்கேல் ஹூலி ரே(Michael Healy-Rae) மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பரபரப்பான நகரின் மையப் பகுதியில் உள்ள கார்க் சாலையில் எம்.பி ஹீலி-ரே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு நின்ற போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஹீலி-ரே காரின் ஆருகே வந்து முகத்தில் குத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் ஹூலி ரே, லென்ஸ்டர் ஹவுஸில் நடந்த அன்றாட பணிகளை நிறைவு செய்துவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
செயிண்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மைக்கேல் ஹீலி தற்போது உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுக்கான சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கெவின் ஸ்ட்ரீட் காவல் நிலையம் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.