இந்தியாவில் அறிமுகமாகும் புதிய Ducati "Hypermotard 698 Mono பைக்! விலை என்ன தெரியுமா?
பிரபல இத்தாலிய மோட்டார் சைக்கிள் நிறுவனமான டுகாட்டி, திங்கட்கிழமை அதன் புது ஹைப்பர்மோட்டார்டு 698 மோனோ பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
ரூ. 16,50,000 என்ற விலையில் கிடைக்கும் இந்த இருசக்கர வாகனம், சக்திவாய்ந்த இன்ஜின், டுகாட்டி-யின் சிறந்த வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதில் உலகின் மிக சக்தி வாய்ந்த சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
The new Ducati Hypermotard 698 Mono is here to present itself: https://t.co/oWhN9Bk0Mm#Hypermotard698Mono #Hypermotard698MonoRVE #LivePlayRide #DucatiWorldPremiere #DWP2024 pic.twitter.com/zczq2agNzc
— Ducati (@DucatiMotor) November 2, 2023
Ducati "Hypermotard 698 Mono, டுகாட்டி நிறுவனத்தின் பொறியியல் சிறப்பை வெளிப்படுத்துகிறது" என்று டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் திரு. பிபுல் சந்திரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Style மற்றும் Performance
தனித்துவமான வடிவமைப்பு கூறுகள் இந்த பைக்கின் Style-ஐ மேம்படுத்துகின்றன. பின்புறத்தின் இருபுறங்களிலும் பொருத்தப்பட்ட இரட்டை எக்ஸாஸ்டுகள்/// Y ஸ்போக் அலாய் வீல்கள்
- இரட்டை "C" லைட் டிசைன் கொண்ட LED ஹெட்லைட்
- உயரமான, தட்டையான சீட்
- உயரமான முன் மட் கார்டு
- கூர்மையான டெயில்
Ducati have finally brought their most powerful road-legal, production, single-cylinder bike to our market.
— BikeIndia.in (@bikeindia) July 8, 2024
The Ducati Hypermotard 698 Mono has been launched at a whopping Rs 16.50 lakh (ex-showroom), making it the most expensive single-cylinder motorcycle currently on sale in… pic.twitter.com/2N7SqyzExo
மேம்பட்ட சிறப்பம்சங்கள்
ஹைப்பர்மோட்டார்டு 698 மோனோ விரிவான எலெக்ட்ரானிக் கட்டுப்பாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.
- ABS கார்னரிங்
- டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல்
- டுகாட்டி வீலி கண்ட்ரோல்
- இன்ஜின் பிரேக் கண்ட்ரோல்
- டுகாட்டி பவர் லாஞ்ச்
- ரைடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் அதே நேரத்தில் செயல்திறனை அதிகரிக்க இந்த அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஹைப்பர்மோட்டார்டு 698 மோனோ பைக்கின் டெலிவரி ஜூலை மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |