போலியான நேர்காணலில் ஈடுபட்ட மேகன் மெர்க்கல்! பரபரப்பு குற்றச்சாட்டு
சஸ்ஸெக்ஸ் ஆப் டச்சஸ் மேகன் மெர்க்கல் தனது ஆடியோ நிகழ்ச்சியில் சில போலி நேர்காணல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
25 மில்லியன் டொலர் ஒப்பந்தம்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியும், சஸ்ஸெக்ஸ் ஆப் டச்சஸுமான மேகன் மெர்க்கல் Spotify எனும் ஆடியோ தளத்துடன் ஒப்பந்தம் ஆகி ஆடியோ Podcast செய்து வருகிறார்.
இலாபரமான ஆடியோ ஒப்பந்தத்திற்காக ஹரி மற்றும் மேகனுக்கு Spotify 25 மில்லியன் டொலர்கள் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spotify
போலி நேர்காணல் குற்றச்சாட்டு
இந்நிலையில், தொழில்துறை ஆதாரங்கள் மேகன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன. அதாவது, மேகன் தனது Archetypes Podcast-களுக்காக பல்வேறு நேர்காணல்களை போலியாகக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர் தனது ஊழியர்களை நேர்காணல்கள் நடத்த செய்ததாகவும், பின்னர் அவரது குரலின் ஆடியோவை இறுதி அத்தியாயங்களில் திருத்தியதாகவும் (Edit) Podcast மையப்படுத்தப்பட்ட Outlet Podnews-யினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
REUTERS/Andrew Kelly/File Photo
அதேபோல் இந்த Episode-கள் எதுவும் குறிப்பாக highlight செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேகனின் Archetypes Podcast கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்களைப் பரப்புவது உட்பட சில சர்ச்சைகளின் மையமாக உள்ளது.
Spotify
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |