உலகின் அதிக ஊதியம் பெறும் செல்வாக்குமிக்கவராக மாறும் மேகன் மெர்க்கல்!
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், உலகிலேயே அதிக ஊதியம் பெறும் செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராக மாறக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கிம் கர்தாஷியனுக்கு போட்டியாக மாறும் மேகன்
இளவரசர் ஹரியுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்த பின்னர், 2014ஆம் ஆண்டில் தொடங்கிய தனது வர்த்தக முத்திரையை மேகன் மூடினார். அதனை சமீபத்தில் அவர் புதுப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து Dior பேஷன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் கிம் கர்தாஷியனின் டோல்ஸ் மற்றும் கபனா campaign-க்கு போட்டியாக மேகன் மாறுவார் என்றும், அவர் ஒரு இடுகைக்கு 200,000 பவுண்டுகள் சம்பாதிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் அவர் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் டியரின் புதிய முகமாக மாறுவார் என்றும், இதன்மூலம் உலகிலேயே அதிக ஊதியம் பெறும் செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராக மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பிராண்ட் மற்றும் கலாச்சார நிபுணரான நிக் ஈட் இதனை உறுதிப்பட கூறியுள்ளார். 200 மில்லியன் பவுண்டருக்குள் மதிப்புள்ள Gwyneth Paltrow's Goop இணையதளத்திற்கு போட்டியாக, மேகன் தனது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை வலைப்பதிவான The Tigஐ விரைவில் கொண்டு வரலாம் என்ற பரிந்துரைகள் இருந்தன.
Evan Agostini / Invision / Associated Press
அடையாளத்தை மீட்டெடுக்கும் மேகன்
மான்டெசிட்டோ ஆதாரம் கூறும்போது, மேகன் மற்றும் விக்டோரியா மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். மேகனுக்கு தோல் பராமரிப்பு அல்லது மேக்கப் பிராண்டை உருவாக்க விக்டோரியா மற்றும் பில் உதவுவார்கள் என்றது.
இதற்கிடையில், கடந்த மாதம் இளவரசர் ஹரி ராணுவ ஆடைகளுக்குப் பதிலாக, மன்னர் முடிசூட்டு விழாவில் பிரெஞ்சு வடிவமைப்பாளருடன் ஜோடி சேர தைரியமான முடிவை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கின் 360 bespoke PR ஏஜென்சியை நடத்தி வரும் ஜெர்மி மர்பி கூறும்போது மேகன் தனது அடையாளத்தை மீட்டெடுக்கிறார், அவரும் ஹரியும் வெவ்வேறு பாதையில் இருப்பதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |