வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த விவகாரம்! கேரள அரசு எடுத்த முடிவு!
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரின் அரசு வேலை பறிக்கப்பட்டுள்ளது
வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவம் கேரளாவில் அடிக்கடி நிகழ்கிறது.
இந்நிலையில் ஜூன் மாதம் 21ஆம் தேதி வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஸ்மையா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பலர் விஸ்மையாவிற்காக நீதி கேட்டு போராடியதும் குறிப்பிடத்தக்கது. கிரண் குமாருக்கு மாமியார் வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்ட கார் பிடிக்காததால் விஸ்மையாவை கொடூரமாக தாக்கி துன்புறுத்தியுள்ளார்.
இதனால் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கிரண் குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மேல் சுமத்தப்பட்ட குற்றம் யாவும் உண்மை என்று உறுதியானதால் அவரது அரசு பணி பறிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு கேரள அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.