நிபா வைரஸ் எதிரொலி! 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. சோகத்தில் பெற்றோர்கள்
கேரளாவில் 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் முதலாக கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு தீயாய் பரவ தொடங்கியது. கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது அங்கு நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி பீதியை கிளப்பி உள்ளது.
நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் தற்போது நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இந்நோய்க்கு இன்று 12 வயது சிறுவன் ஒருவன் பலியாகி உள்ளார்.
கோழிக்கோடு பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 12 வயது சிறுவன் ஒருவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு நோய் பாதிப்பு அதிகரித்தது.
இதையடுத்து சிறுவனின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சிறுவனுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவன் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தார்.