ஜேர்மனியில் கபாப் உணவொன்று குறித்து உருவாகியுள்ள கவலை: ஒரு சுவாரஸ்ய தகவல்
ஜேர்மனியில், கபாப் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளதால், கபாப் தட்டுப்பாடு ஏற்படலாம் அல்லது கபாப் விலை உயரலாம் என ஜேர்மானியர்கள் கவலைப்படத் துவங்கியுள்ளார்கள்.
வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ள ஊழியர்கள்
ஜேர்மனியில் பிரபலமான, ஜேர்மானியர்களால் விரும்பி உண்ணப்படும், ஒருவகை கபாபை தயாரிக்கும் நிறுவனமான Birtat Meat World SE factory, தென்மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது.
அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர். தங்கள் ஊதியத்தை 375 யூரோக்களாக உயர்த்தக் கோரியும், பாரபட்சம் காட்டாமல் எல்லோருக்கும் ஒரேவிதமான ஊதியம் வழங்கக் கோரியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் அவர்கள்.
ஜேர்மனி முழுவதும், மாதம் ஒன்றிற்கு 13 மில்லியன் வாடிக்கையாளர்கள் Birtat கபாபை வாங்கி உண்கிறார்கள்.
தற்போது, அந்த நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளதால், கபாப் தட்டுப்பாடு ஏற்படலாம் அல்லது கபாப் விலை உயரலாம் என ஜேர்மானியர்கள் கவலைப்படத் துவங்கியுள்ளார்கள்.
இன்னொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இந்த கபாப் ஜேர்மன் தயாரிப்பு அல்ல.
1970களில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த துருக்கி நாட்டவர்கள்தான் அதை அறிமுகம் செய்தார்கள். அது தற்போது ஜேர்மனியில் பிரபலமாகிவிட்டது.
ஜேர்மனிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் பலர் இந்த Birtat கபாபை ஜேர்மன் தயாரிப்பு என எண்ணி அதை ஆவலுடன் வாங்கி சுவைக்கிறார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |