நடிகர் துல்கர் சல்மானின் மொத்த சொத்து மதிப்பு
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானின் சொத்து மதிப்பு குறித்து இங்கே காண்போம்.
துல்கர் சல்மான்
மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், தந்தையைப் போலவே மலையாளத்தைத் தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
இதன்மூலம் அதிக ஊதியம் பெறும் மலையாள நடிகர்களில் ஒருவராக உள்ள துல்கர் சல்மான் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஆண்டு வருமானம்
பாடகர், தயாரிப்பாளராகவும் உள்ள துல்கர் சல்மான் 4 பிலிம்பேர் விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருது, தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா (DPIFF) விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
2017ஆம் ஆண்டில் துல்கர் சல்மானின் மதிப்பிடப்பட்ட ஆண்டு வருமானம் ரூ.9.28 கோடியாக இருந்தது.
இது ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் 100 பட்டியலில் அவரது இடத்தைப் பிடித்தது.
ஆடம்பர கார்கள்
ஒரு படத்திற்கு துல்கர் சுமார் ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார். அத்துடன் பிற வருமான ஆதாரங்களில் பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் பல்வேறு பொது நிகழ்வுகளில் தோன்றுவதும் அடங்கும்.
துல்கரின் ஆடம்பர உடமைகளைப் பொறுத்தவரை, Porsche 911 Carrera S, Audi Q7, Mercedes-Benz SLS AMG, Range Rover Vogue மற்றும் BMW M3 Convertible ஆகிய விலையுயந்த கார்களை வைத்திருக்கிறார்.
மேலும் Ferrari 458 Spider, BMW X6, Mercedes Benz AMG G63, BMW Z4, BMW M5 மற்றும் BMW i8 ஆகியவையும் துல்கர் சல்மானின் கார் கலெக்ஷனில் அடங்கும்.
ரூ.100 கோடி வீடு
துபாயில் துல்கருக்கு சுமார் ரூ.14 கோடி விலையில் ஒரு Penthouse உள்ளது.
தனது தந்தையுடன் கொச்சியில் ஒரு வீட்டின் இணை உரிமையாளராக துல்கர் சல்மான் உள்ளார். இதன் மதிப்பு ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது.
TOIயின் அறிக்கையின்படி துல்கர் சல்மானின் தற்போதைய சொத்துமதிப்பு ரூ.57 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |