அறிமுக போட்டியிலேயே முத்திரை பதித்த இலங்கை வீரர்! 89 ரன்னில் சுருண்ட மே.தீவுகள்..தரமான பதிலடி
இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகே தனது அறிமுக டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார்.
பதும் நிசங்கா 54
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பதும் நிசங்கா 54 (49) ஓட்டங்கள் எடுத்தார்.
சுருண்ட மேற்கிந்திய தீவுகள்
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 16.1 ஓவரில் 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. அறிமுக வீரர் துனித் வெல்லாலகே (Dunith Wellalage) 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அவரது பந்துவீச்சில் பிரண்டன் கிங் 5 ஓட்டங்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ரஸ்டன் சேஸ் ஓட்டங்கள் எடுக்காமல் கமிந்து மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஆந்த்ரே பிளெட்சரை 4 ஓட்டங்களில் வெல்லாலகே வெளியேற்றினார்.
வெல்லாலகே 24 ஒருநாள் போட்டிகளில் 30 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/27 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |