அமைச்சர் துரைமுருகனின் ரூ.60,000 கோடி Audio வெளியிட்டால்... மிரட்டும் குடியாத்தம் குமரன்
மணல் விவகாரத்தில் தமிழக அமைச்சர் துரைமுருகன், ரூ.60,000 கோடி சம்பாதித்தது தொடர்பான ஆடியோ வெளியிட்டால் அவரது பதவி இருக்காது என திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கூறியுள்ளார்.
துரைமுருகன் மீது குற்றச்சாட்டு
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் பேசியதன் காரணமாக திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்த குடியாத்தம் குமரனை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதிலிருந்தே, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் மீது தொடர் குற்றச்சாட்டுகளை குடியாத்தம் குமரன் கூறியுள்ளார்.
ரூ.60,000 கோடி
தற்போது, துரைமுருகன் தொடர்பாக குடியாத்தம் குமரன் வெளியிட்ட வீடியோவில், "எனக்கும், அமைச்சர் துரைமுருகனுக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இந்த மாவட்டத்திற்கு பெரிய பிரச்சனை அவரது மகன் கதிர் ஆனந்த் தான். ஒரு பெரிய தொகைக்கான டெண்டரை பாமகவுக்கு இவர் வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் கட்சிக்கு கஷ்டப்படும் நேரத்தில் கதிர் ஆனந்த் திமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். துரைமுருகன் குடும்பம் மணல் விவகாரத்தில் ரூ.60,000 கோடி சம்பாதித்துள்ளது.
இது தொடர்பாக இவர்கள் இருவரும் ஏலகிரி மலைப் பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ என்னிடம் உள்ளது. நான் அதனை வெளியிட்டால் அமைச்சர் துரைமுருகனுக்கு பதவியே இருக்காது" எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது, திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |