துரியன் பழத்திற்கு அடிமையாகும் சீன மக்கள்... ஒரே ஆண்டில் ரூ 63000 கோடிக்கு இறக்குமதி
மலேசியப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் துரியன் பழத்திற்கு தற்போது சீன மக்கள் அடிமையாகி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சீனர்களின் ஹெர்மெஸ்
மலேசியாவின் குட்டி நகரமான Raub சுற்றுவட்டாரங்களில் மிக அதிகமாக காணப்படும் துரியன் பழங்கள், அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து வருகிறது.

19 ஆம் நூற்றாண்டில் தங்கச் சுரங்க நகரமாக இருந்த ரௌப், சமீபத்திய ஆண்டுகளில் அதன் பொருளாதாரத்தை இன்னொரு மஞ்சள் நிறம் வலுப்படுத்தி வருகிறது. இன்று ரெளப் நகரம் Musang King என்றே அறியப்படுகிறது.
வெண்ணெய் போன்ற, கசப்பு மற்றும் இனிப்பு கலந்த இந்தப் பழத்தை சீனர்கள் தற்போது ஹெர்மெஸ் என்று அழைக்கின்றனர். 2024ல் மட்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ 63,164 கோடிக்கு சீனா இறக்குமதி செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகம். மட்டுமின்றி, உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான துரியன் பழங்களின் ஏற்றுமதி தற்போது சீனாவிற்கே செல்கின்றன.
சீன மக்களில் 2 சதவீதம் பேர் மட்டுமே துரியன் பழங்களை வாங்க விரும்பினாலும், அதுவே போதுமான வணிகம் என கூறுகின்றனர். துரியன் பழத்திற்கு அடிமையானவர்கள் பழங்களின் ராஜா என பெருமைப்படும் போது, இணையவாசிகள் இதை உலகின் மிகவும் துர்வாடையான பழம் என குறிப்பிடுகின்றனர்.
மலேசியா மட்டுமின்றி, தற்போது தாய்லாந்தும் வியட்நாமும் சீனாவிற்கு அதிக அளவில் துரியன் பழங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.. இருப்பினும் முசாங் கிங் போன்ற உயர் ரகங்களால் நற்பெயரைப் பெற்றுள்ள மலேசியாவின் சந்தைப் பங்கு வேகமாக வளர்ந்து வருகிறது.

மலேசியாவில் ஒரு துரியன் பழத்திற்கு சராசரி விலை 2 அமெரிக்க டொலர். ஆனால் முசாங் கிங் போன்ற உயர் ரகங்களுக்கு 14 முதல் 100 டொலர் வரையில் விலை இருக்கும்.
அவை ஈடாகாது
மலேசியாவில் ஒருமுறை துரியன் பழம் ருசித்த சீனப் பெண்மணி தற்போது தென் சீனாவில் இருந்து துரியன் பழங்களை ஏற்றுமதி செய்கிறார்.
துரியன் பழங்களுக்கு அடிமையான சீன மக்களின் அதிகரித்த தேவையைப் பூர்த்தி செய்ய, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் மலேசியாவில் இருந்து மட்டுமின்றி, கம்போடியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் லாவோஸ் நாடுகளில் இருந்தும் சீனா இறக்குமதி செய்கிறது.

2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீனா-லாவோஸ் ரயில் பாதை ஊடாக தற்போது ஒவ்வொரு நாளும் 2,000 டன்களுக்கும் அதிகமான பழங்கள் கொண்டு செல்லப் படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை தாய் துரியன் பழங்கள்.
இதனிடையே, சீனாவின் தீவு மாகாணமான ஹைனானில் இறுதியாக துரியன் பழங்களின் அறுவடை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2000 டன் வரையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மலேசியாவின் சாதாரண துரியன் பழங்களின் சுவைக்கும் குணத்திற்கும் அவை ஈடாகாது என்றே ரெளப் நகர வேளாண் மக்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |