புயல் ஒருபக்கம் சுழன்றடிக்க... புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை புயல் ஹிலாரி சுழன்றடித்து வரும் நிலையில் தெற்கு கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
ஹிலாரி புயல் நெருங்கி வருவதன் காரணமாக குடியிருப்பாளர்கள் பதுங்கியிருக்க பிராந்தியத்தின் பெரும்பகுதியை நிலநடுக்கம் உலுக்கியது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே தெற்கு கலிபோர்னியாவில் ஞாயிற்றுக்கிழமை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
@reuters
இதனையடுத்து வெளியான தகவலில், பாதிப்பு அல்லது உயிரிழப்பு தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி 2.41 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு நில அதிர்வுகளுக்கு பின்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவிக்கையில், நிலநடுக்கம் காரணமாக சுனாமி வாய்ப்புகள் இல்லை என்றே பதிவு செய்துள்ளனர்.
@reuters
தெற்கு கலிபோர்னியா முழுவதும் ஹிலாரி புயல் காரணமாக பலத்த மழையை எதிர்கொண்ட நிலையில், நிலநடுக்கம் புரட்டிப்போட்டுள்ளது.
@reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |