50 லட்சத்திற்கு இலங்கையின் மிரட்டலான பவுலரை இணைத்த KKR! 2024 ஐபிஎல்லில் அதிரடி மாற்றம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கஸ் அட்கின்சனுக்கு பதிலாக இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை அணியில் இணைத்துள்ளது.
அணியில் மாற்றம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சனுக்கு பதிலாக இலங்கை பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீராவை கொல்கத்தா அணி நியமித்துள்ளது.
தனது Swing மற்றும் Seam பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் சமீரா. இவர் 2018 மற்றும் 2021 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார்.
@AFP
பிரித்தானியா முழுவதும் இதை கொண்டுவாருங்கள் ரிஷி சுனக்! நான் முழுமையாக ஆதரிக்கிறேன் - முன்னாள் கிரிக்கெட் வீரர்
துஷ்மந்த சமீரா
அதன் பின்னர் 2022ஆம் ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடியிருந்தார். தற்போது 50 லட்சம் ரூபாய் ரிசர்வ் விலையில் சமீராவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இணைத்துள்ளது.
துஷ்மந்த சமீரா 12 ஐபிஎல் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், 55 சர்வதேச டி20யில் 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
@IPL
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |