குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கை: Roblox மீது நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு விசாரணை
ரோப்லாக்ஸ்(Roblox) தளத்தின் மீது நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளது.
ரோப்லாக்ஸ் மீது விசாரணை
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் ரீதியான காட்சிகள் தொடர்பாக ஆன்லைன் விளையாட்டு தளமான ரோப்லாக்ஸ்(Roblox) மீது நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க தவறியதற்காகவும், போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் ரோப்லாக்ஸ்(Roblox) தளம் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகள்
தீய எண்ணம் கொண்ட நபர்கள் இந்த தளத்தின் மூலம் சிறுவர்களை குறி வைக்கின்றனர். மேலும் சிறுவர்களை தூண்டி தேவையற்ற பொருளை அதிக அளவு வாங்க வைக்கும் நடவடிக்கையும் இந்த தளத்தில் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் டிஜிட்டல் சேவை சட்டத்தின்(DSA) கீழ் விசாரிக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டால் ரோப்லாக்ஸ்(Roblox) தளம் மிகப்பெரிய அபராதத்தை விதிக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு “எபிக் கேம்ஸ்” என்ற நிறுவனம் குழந்தைகளை சுரண்டியதற்காக மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரோப்லாக்ஸ் நடவடிக்கை
குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரோப்லாக்ஸ் நிறுவனம் முகம் கண்டறியும் தொழில்நுட்பத்தை தங்களது தளத்தில் பயன்படுத்த தயாராகி வருவதாகவும், நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |